கங்கைகொண்டான் அருகே பரிதாபம், கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை

கங்கைகொண்டான் அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
கங்கைகொண்டான் அருகே பரிதாபம், கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து. விவசாயி. இவருடைய மனைவி கிருஷ்ணம்மாள் (வயது 38). இவர்களுக்கு காளி (6) என்ற மகனும், ரம்யா, லட்சுமி ஆகிய 3 வயது இரட்டை பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பேச்சிமுத்து உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் கிருஷ்ணம்மாள் துக்கத்தில் இருந்து வந்தார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடிப்பெருக்கை முன்னிட்டு, தன்னுடைய குழந்தைகளுடன் பாபநாசம் கோவிலுக்கு சென்று வந்தார். பின்னர் கிருஷ்ணம்மாள், தன்னுடைய கணவர் இல்லாமல் குழந்தைகளை எப்படி வளர்ப்பேன்? என்று புலம்பியவாறு இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் கிருஷ்ணம்மாள் தனது வீட்டில் குழந்தைகள் தூங்கிய பின்னர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலையில் கிருஷ்ணம்மாள் இறந்து கிடந்ததைப் பார்த்த குழந்தைகள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், கங்கைகொண்டான் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த கிருஷ்ணம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com