வெப் தொடரில் விஜய் சேதுபதி

வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் தமிழ், இந்தி, தெலுங்கில் அதிக தொடர்கள் தயாராகின்றன.
வெப் தொடரில் விஜய் சேதுபதி
Published on

முன்னணி நடிகர், நடிகைகள் வெப் தொடர்களுக்கு மாறி வருகிறார்கள். ஜெயலலிதா வாழ்க்கை கதையான குயின் வெப் தொடரில் ரம்யா கிருஷ்ணன், சோனியா அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். பிரசன்னா, பரத் பாபி சிம்ஹா, நித்யா மேனன், மீனா ஆகியோரும் வெப் தொடர்களில் நடித்து இருக்கிறார்கள். சூர்யா, சத்யராஜ், காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா, பிரியா பவானி சங்கர், பிரியாமணி உள்ளிட்ட பலர் வெப் தொடர்களில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் விஜய் சேதுபதியும் வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடர் இந்தியில் தயாராகிறது. விஜய்சேதுபதியுடன் பிரபல இந்தி நடிகர் ஷாஹித் கபூரும் நடிக்கிறார். கிரிஷ், டீகே ஆகியோர் இயக்குகிறார்கள். இதில் மாளவிகா மோகனனும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். விஜய்சேதுபதி கைவசம் மாஸ்டர், லாபம், மாமனிதன், துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்கள் உள்ளன. மாஸ்டர் பொங்கலுக்கு வெளியாகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com