திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,478 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,478 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
Published on

இந்நிலையில் தற்போது மீண்டும் தொற்று அதிகரித்து நேற்று கொரோனா தொற்றால் 1,478 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 239 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 63 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.ஆஸ்பத்திரியில் 7,299 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் கொரோனா தொற்றால் 1,877 பேர் இறந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் நேற்று கொரோனா தொற்றால் 2 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com