திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 416 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் கொரானா தொற்றால் 416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 416 பேர் பாதிப்பு
Published on

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 44 ஆயிரத்து 879 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 406 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 4 ஆயிரத்து 558 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் 1,915 பேர் இறந்துள்ளனர். கொரோனா தொற்றால் நேற்று மாவட்டத்தில் ஒருவர் இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com