திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 300-க்கும் கீழ் குறைந்தது

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 275 பேர் பாதிப்படைந்த நிலையில், ஒரு நாள் பாதிப்பு 300-க்கும் கீழ் குறைந்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 300-க்கும் கீழ் குறைந்தது
Published on

275 பேருக்கு கொரோனா

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், பலியாகி வருவோரின் எண்ணிக்கையும் தமிழக அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கையின் காரணமாக குறைந்து வருகிறது.இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 275 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

7 பேர் பலி

இதுவரையில் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 8 ஆயிரத்து 650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 91 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1,925 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1,634 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 7 பேர் இறந்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com