திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஒரு நாள் பாதிப்பு 200-க்கும் கீழ் குறைந்தது

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 197 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஒரு நாள் பாதிப்பு 200-க்கும் கீழ் குறைந்தது
Published on

இதுவரையில் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 9 ஆயிரத்து 688 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 38 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 991 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1,659 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 6 பேர் இறந்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com