திருவள்ளூர் மாவட்டத்தில் வேகமாக பரவுகிறது: கொரோனா தொற்று பாதிப்பு ஒரே நாளில் ஆயிரத்தை தாண்டியது 8 பேர் பலி

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், நேற்று ஒரே நாளில் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது.
திருவள்ளூர் மாவட்டத்தில் வேகமாக பரவுகிறது: கொரோனா தொற்று பாதிப்பு ஒரே நாளில் ஆயிரத்தை தாண்டியது 8 பேர் பலி
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு 600-ஐ தாண்டி வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் நேற்று உச்சக்கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆயிரத்து 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரையில் மாவட்டம் முழுவதும் 61 ஆயிரத்து 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 55 ஆயிரத்து 36 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

5 ஆயிரத்து 534 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 815 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 8 பேர் இறந்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com