திருவள்ளூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடந்தது

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் வேளாண்மை துறை சார்பில் காணொலி காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
திருவள்ளூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடந்தது
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் வேளாண்மை துறை சார்பில் காணொலி காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தை தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர் காணொலி காட்சி வாயிலாக மாவட்டத்திலுள்ள விவசாயிகளிடம் உரையாடினார். அப்போது அவர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யுமாறு முறையிட்டனர்.அதன்மீது விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, வேளாண்மை இணை இயக்குனர் சம்பத், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபினேசர் மற்றும் பல்வேறு துறையை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com