ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் வருமானம் ரூ.94½ லட்சம்

ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் வருமானம் ரூ.94½ லட்சம்
ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் வருமானம் ரூ.94½ லட்சம்
Published on

ஸ்ரீரங்கம், டிச.30 -
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை மாதந்தோறும் உண்டியலை திறந்து எண்ணுவது வழக்கம். இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று கருட மண்பத்தில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது. இதில் வழக்கமான உண்டியல்களில் ரூ. 89 லட்சத்து 13 ஆயிரத்து 913-ம் மற்றும் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு அர்ச்சுன மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், சொர்க்கவாசல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தற்காலிக உண்டியலில் ரூ.5 லட்சத்து 52 ஆயிரத்து 210 -ம் என மொத்தம் ரூ.94 லட்சத்து 66 ஆயிரத்து 123 ரொக்கமும், 165 கிராம் தங்கமும், 1,164 கிராம் வெள்ளியும் இருந்தது. இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com