தபால்துறையில் வேலை

இந்திய தபால் துறையில் ‘கிராமின் தேக் சேவாக்’ (ஜி.டி.எஸ்) பணி அடிப்படையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தபால்துறையில் வேலை
Published on

நாடு முழுவதும் 12,828 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். உள்ளூர் மொழியை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

கம்ப்யூட்டர் அடிப்படை அறிவும் பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டவும் தெரிந்திருக்க வேண்டும்.

11-6-2023 அன்றைய தேதிப்படி 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.

விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் 'மெரிட் லிஸ்ட்' எடுக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

10-ம் வகுப்பில் பெறப்பட்ட மதிப்பெண்கள் மட்டுமே கணக்கிடப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 11-6-2023.

விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com