இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கமல்.. வைரலாகும் புகைப்படம்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் -2. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கமல்.. வைரலாகும் புகைப்படம்
Published on

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு திருப்பதியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் கமல் படப்பிடிப்பு தளத்தில் ஹெலிக்காப்டர் அருகில் நின்று கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com