தொற்று படிப்படியாக குறைவு: கொரோனாவுக்கு ஒரே நாளில் 29 பேர் பலி 392 பேர் பாதிப்பு

கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 29 பேர் பலியானார்கள். 392 பேர் பாதிக்கப்பட்டனர்.
தொற்று படிப்படியாக குறைவு: கொரோனாவுக்கு ஒரே நாளில் 29 பேர் பலி 392 பேர் பாதிப்பு
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், பலியாகி வருவோரின் எண்ணிக்கையும் தமிழக அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கையின் காரணமாக குறைந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 392 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 7 ஆயிரத்து 377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 1லட்சத்து 3 ஆயிரத்து 244 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 2 ஆயிரத்து 533 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1,600 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 29 பேர் இறந்து உள்ளனர். எனவே பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவை முறையாக கடைபிடித்து நோய்த் தொற்றில் இருந்து தங்களைப் காத்துக் கொள்ள பாதுகாப்பாக நடந்துகொள்ள வேண்டும் என கலெக்டர் பா.பொன்னையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com