பெரம்பலூரில் 3 பேருக்கு கொரோனா தொற்று

பெரம்பலூரில் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூரில் 3 பேருக்கு கொரோனா தொற்று
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 3 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 13 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 20 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவரும், 75 வயதுடைய பெண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 67 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 170 பேரும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 1,188 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 1,050 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com