

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 11,592 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 11,274 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட பரிசோதனை முடிவின்படி 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 93 பேர்களில் 10 பேர் தனிமைப்படுத்தும் முகாம்களிலும், வீடுகளிலும் தனிமைப் படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். நேற்றும் கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை.