சாலை விபத்தில் தொழிலாளி படுகாயம்

சாலை விபத்தில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
கரூர்
கரூர்
Published on

கிருஷ்ணராயபுரம்,

கரூர் மாவட்டம், கீரனூர் நாச்சார் பட்டியை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 55). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தரகம்பட்டி- இரும்பூதிபட்டி சாலையில் பஞ்சப்பட்டி பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது வயலூர் நடுப்பட்டியை சேர்ந்த பரமசிவம் என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக குமாரசாமி மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து குமாரசாமி மனைவி நாகலட்சுமி கொடுத்த புகாரின் பேரின் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com