

கிருஷ்ணராயபுரம்,
கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள வளையல்காரன் புதூரை சேர்ந்த குப்புசாமி (வயது 62). இவர் வேலைக்கு சென்றுவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ஆர்.புதுக்கோட்டை முனியப்பன் கோவில் அருகே சென்றபோது திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே உள்ள பாப்பாத்திகுளத்தை சேர்ந்த லட்சுமி நாராயணன் (27) என்பவர் ஓட்டி வந்த சரக்கு வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக குப்புசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த குப்புசாமி கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.