சமத்துவ உலகை உருவாக்குவோம்!

அனைத்து மக்களும் சுதந்திரமாகவும், சம உரிமையோடும், ஒருவருக்கொருவர் ஏற்றத்தாழ்வு, பாகுபாடு இல்லாமல் அனைத்தும் பெற வேண்டும்.
சமத்துவ உலகை உருவாக்குவோம்!
Published on

லகில் மனிதராக பிறந்த அனைவருக்கும் உணவு, உடை, உறைவிடம், மருத்துவம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொண்டு கண்ணியமாக வாழ்வதற்கான உரிமை உள்ளது. இதை இனம், நிறம், மொழி, சமூகம், பாலினம், பொருளாதாரம் போன்ற காரணங்களுக்காக மறுப்பதும், பாகுபாடு காட்டுவதும் தவறானது.

இந்தக் கருத்தை வலியுறுத்தி 1948-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந் தேதி, உலக மனித உரிமைப் பேரறிக்கை என்ற பெயரில் உலக மக்கள் அனைவருக்குமான வாழ்வுரிமைகளை ஐ.நா. சபை பிரகடனப்படுத்தியது. இதன் அடிப்படையில், இந்த நாள் 1950-ம் ஆண்டு முதல் சர்வதேச மனித உரிமை தினம் என அறிவிக்கப்பட்டு, ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அனைத்து மக்களும் சுதந்திரமாகவும், சம உரிமையோடும், ஒருவருக்கொருவர் ஏற்றத்தாழ்வு, பாகுபாடு இல்லாமல் அனைத்தும் பெற வேண்டும். தன்னைப்போல சக மனிதனையும் வாழ வைக்க வேண்டும் எனும் நெறிமுறையை உணர்த்துவதே மனித உரிமை தினத்தின் நோக்கமாகும்.

நாம் எதிர்பார்க்கும் உரிமையையும், கண்ணியத்தையும், பிறருக்கும் அளிக்க வேண்டும். எந்த காரணத்துக்காகவும் சக மனிதரின் வாழ்விலும், அடிப்படை உரிமைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது. சமத்துவம் நிறைந்த சமூகத்தை உருவாக்குவதில் பங்களிக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com