ஸ்டப்கூல் பவர் பேங்க் அறிமுகம்

ஸ்டப்கூல் பவர் பேங்க் அறிமுகம்
Published on

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஸ்டப்கூல் நிறுவனம் புதிதாக 10 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரியை உள்ளடக்கிய 30 வாட் திறன் கொண்ட பவர் பேங்க்கை அறிமுகம் செய்துள்ளது. விரைவாக சார்ஜ் ஆகும் திறன், கையடக்க மான அளவு, டைப் சி இணைப்பு வசதி உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்களாகும். 6 செ.மீ. நீளம், 8 செ.மீ. அகலம் கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பவர் பேங்கில் ஆப்பிள் ஐ-போன் 14 மாடலை இரண்டு முறை சார்ஜ் செய்து கொள்ளும் அளவிற்கு மின்சாரம் சேமிக்கப்படும். இதன் விலை சுமார் ரூ.1,999.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com