ஹீரோ கரிஸ்மா எக்ஸ்.எம்.ஆர் 210 அறிமுகம்

ஹீரோ கரிஸ்மா எக்ஸ்.எம்.ஆர் 210 அறிமுகம்
Published on

ஹீரோ கரிஸ்மா எக்ஸ்.எம்.ஆர் 210இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இரு சக்கர வாகனங்களைத் தயாரிக்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது கரிஸ்மா மாடல் மோட்டார் சைக்கிளில் எக்ஸ்.எம்.ஆர் 210 எனும் புதிய மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த மோட்டார் சைக்கிள் புதுப்பொலிவுடன் மீண்டும் சந்தைக்கு வருகிறது. 223 சி.சி. திறன் கொண்ட என்ஜின் இதன் சிறப்பம்சம். பார்ப்பதற்கு பிரமாண்டமாக காட்சி அளிக்கும் இந்த மோட்டார் சைக்கிள் பலரையும் ஈர்க்கக் கூடியது. தற்போது லிக்விட் கூல்டு என்ஜினைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள இது ஐந்து கியர்களைக் கொண்டது. இதன் எடை 157 கி.கி. இதன் விலை சுமார் ரூ.1.81 லட்சம்.

இதன் பெட்ரோல் டேங்க் 15.3 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இது 20 பி.ஹெச்.பி. திறனையும். 19.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது. முன்புறம் டெலஸ்கோப்பிக் போர்க் மற்றும் பின்புறம் வாயு நிரப்பப்பட்ட இரட்டை ஷாக் அப்சார்பர் உள்ளன. இரண்டு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக் வசதி உள்ளது. கருப்பு, சிவப்பு, வெள்ளை, ஆரஞ்சு ஆகிய வண்ணங்களிலும், இரட்டை வண்ணங்களிலும் இது கிடைக்கும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com