காதலில் மாமனிதன் பட நடிகை?

நடிகை காயத்ரி மேடைகளில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இளைஞர் ஒருவரை காதலிப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.
காதலில் மாமனிதன் பட நடிகை?
Published on

தமிழில் 'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் காயத்ரி. தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் 'ரம்மி', 'புரியாத புதிர்', 'சூப்பர் டீலக்ஸ்', 'துக்ளக் தர்பார்', 'மாமனிதன்' போன்ற படங்களிலும் நடித்து இருந்தார்.

இதில் 'மாமனிதன்' படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்தது. கடந்த வருடம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்து மேலும் பிரபலமானார்.

இந்த நிலையில் காயத்ரி மேடைகளில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இளைஞர் ஒருவரை காதலிப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. இருவரும் ஜோடியாக சுற்றுவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தகவல் வைரலாகி வரும் நிலையில் அதனை காயத்ரி உறுதிப்படுத்தவும் இல்லை, மறுக்கவும் இல்லை.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com