கர்நாடகத்தை 2 ஆக பிரிக்க ஆலோசனை நடக்கிறதா? மந்திரி உமேஷ்கட்டிக்கு சித்தராமையா கண்டனம்

கர்நாடகத்தை 2 ஆக பிரிக்க ஆலோசனை நடப்பதாக கூறிய மந்திரி உமேஷ்கட்டிக்கு சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தை 2 ஆக பிரிக்க ஆலோசனை நடக்கிறதா? மந்திரி உமேஷ்கட்டிக்கு சித்தராமையா கண்டனம்
Published on

பெங்களூரு:

அதிர்ச்சி தகவல்

கர்நாடகம் 2 ஆக பிரியும் என்று மந்திரி உமேஷ்கட்டி கூறியுள்ள கருத்து குறித்து கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தை 2 ஆக பிரிப்பது குறித்து பிரதமர் மோடி மட்டத்தில் விவாதம் நடப்பதாக மந்திரி உமேஷ்கட்டி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். உமேஷ்கட்டி ஒரு பொறுப்பான பதவியில் உள்ளார். அவரை கண்டிக்கிறேன். பா.ஜனதா கட்சி அல்லது அரசுமட்ட அளவில் இத்தகைய விவாதங்கள் நடக்காமல் உமேஷ்கட்டி அந்த கருத்தை கூறியிருக்க வாய்ப்பு இல்லை. ஒருவேளை அவர் கூறியுள்ள தகவல் பொய் என்றால் அவரை உடனடியாக மந்திரிசபையில் இருந்து நீக்க வேண்டும்.

கர்நாடகம் உருவானது

ஆயிரக்கணக்கான மூத்த கன்னடர்களின் போராட்டத்தில் ஒருங்கிணைந்த கர்நாடகம் உருவானது. இத்தகைய கர்நாடகத்தை உடைக்க நினைப்பது நமது மாநிலத்திற்கு செய்யும் துரோகம் ஆகும். உமேஷ்கட்டி கர்நாடகத்தை பிரிக்க வேண்டும் என்று சொல்வது இது முதல் முறை அல்ல. மொழி பதற்றம் நிறைந்த பெலகாவியில் இத்தகைய குரல் எழுந்திருப்பதால் அதனால் ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டால் அதற்கு பா.ஜனதா அரசே பொறுப்பேற்க வேண்டும். இதுகுறித்து பிரதமர் மோடி மற்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com