ஆப்பிளும், நியூட்டனும்..!

மரத்தில் இருந்து ஆப்பிள் கீழே விழுவதை கவனித்து, பூமிக்கு ஈர்ப்பு விசை இருக்கிறது என்பதை கணித்தவர், சர்.ஐசக் நியூட்டன்.
ஆப்பிளும், நியூட்டனும்..!
Published on

கண்டுபிடிப்பு களுக்குள் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட நியூட்டன் திருமணமே செய்து கொள்ளவில்லை. அறிவியலையே வாழ்க்கை துணையாக்கிக் கொண்டார்.

அவரது கதையை தெரிந்து கொள்வோம்.

இங்கிலாந்தின் லங்காஷயரில் 1642-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாளில் நியூட்டன் பிறந்தார். ஆரம்பத்தில் அவர் படிப்பில் கவனம் செலுத்தவில்லை. பிறகு தன்னம்பிக்கை அதிகரித்து நன்றாக படிக்கத் தொடங்கினார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிடி கல்லூரியில் இளங்கலை பட்டம் முடித்தார். தனது 25-வது வயதில் அதே கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணியில் சேர்ந்தார்.

1689-ம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சார்பில் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். நியூட்டனுக்கு 1705-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் ராணி ஆனி 'சர்' பட்டம் வழங்கினார்.

நியூட்டன் ஒருமுறை தன் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தார். அப்போது மரத்தில் இருந்து ஒரு ஆப்பிள் விழுந்ததைப் பார்த்தார். அதைப்பற்றியே சிந்திக்கத் தொடங்கினார். ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்தியால்தான் எல்லா பொருட்களும் பூமியை நோக்கி விழுகின்றன என்று தீர்மானித்தார். அதுவே 'புவி ஈர்ப்பு விசை' என்பதை தனது தொடர் ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்தார். புவிஈர்ப்பு விசை சக்தியால் தான் நாமும் மிதக்காமல் நடக்கிறோம் என்ற உண்மையை கண்டுபிடித்து, உலகிற்கு புதிய பாதையை வகுத்தார் நியூட்டன்.

ஐம்பது வயதில் நியூட்டனுக்கு கடுமையான நரம்பு பிரச்சினையும், தூக்கமின்மையும் ஏற்பட்டன. மூன்று ஆண்டுகள் அவதிப்பட்டார். பின்னர் நன்கு குணமடைந்து மீண்டும் பல்கலைக்கழகப் பணிகளில் ஈடுபட்டார். அதன் பின்னும் தொடர்ந்து பணிசெய்த அவர், 1727-ம் ஆண்டு மார்ச் 20-ந் தேதி இயற்கை எய்தினார்.

புவிஈர்ப்பு விசை சக்தியால் தான் நாமும் மிதக்காமல் நடக்கிறோம் என்ற உண்மையை கண்டுபிடித்து, உலகிற்கு புதிய பாதையை வகுத்தார் நியூட்டன்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com