திருமணமான பெண்ணை வீட்டு வேலை செய்ய சொல்வது கொடுமை அல்ல- ஐகோர்ட்டு கருத்து

திருமணமான பெண்ணை வீட்டு வேலை செய்ய சொல்வது கொடுமைபடுத்துவது ஆகாது என மும்பை ஐகோர்ட்டு கூறியுள்ளது.
திருமணமான பெண்ணை வீட்டு வேலை செய்ய சொல்வது கொடுமை அல்ல- ஐகோர்ட்டு கருத்து
Published on

மும்பை, 

திருமணமான பெண்ணை வீட்டு வேலை செய்ய சொல்வது கொடுமைபடுத்துவது ஆகாது என மும்பை ஐகோர்ட்டு கூறியுள்ளது.

வேலைக்காரி போல நடத்தினர்

மும்பை ஐகோட்டின் அவுரங்காபாத் கிளையில் பெண் ஒருவர் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக தாக்கல் செய்து இருந்த குடும்ப வன்முறை வழக்கு மீதான விசாரணை நடந்து வந்தது. மனுவை நீதிபதிகள் விபா கன்கான்வாடி, ராஜேஷ் பாட்டீல் ஆகியோர் விசாரித்தனர்.

பெண் அவரது புகாரில், திருமணமான ஒரு மாதத்தில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை வீட்டு வேலைக்காரி போல நடத்தியதாக கூறியிருந்தார். மேலும் புதிய கார் வாங்க கணவர் குடும்பத்தினர் ரூ.4 லட்சம் கேட்டு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக கூறியிருந்தார்.

கொடுமைப்படுத்துவது ஆகாது

மனுவை விசாரித்த நீதிபதிகள் "திருமணமான பெண்ணை வீட்டு வேலை செய்ய சொல்வது கண்டிப்பாக குடும்ப தேவைக்காகத்தான் இருக்கும். அதற்காக அதை வேலைக்காரர்கள் செய்வது போன்ற வேலை என கூறமுடியாது. பெண்ணுக்கு வீட்டு வேலை செய்ய விருப்பமில்லை எனில் திருமணத்துக்கு முன்பே அதுகுறித்து மாப்பிள்ளை வீட்டாரிடம் கூறியிருக்க வேண்டும். அப்போது அவர்கள் பெண்ணை திருமணம் செய்வது பற்றி யோசித்து இருப்பார்கள். மேலும் திருமணத்துக்கு பிறகு இதுபோன்ற பிரச்சினை வந்து இருக்காது. எனவே வீட்டு வேலை செய்ய சொல்வது திருமணமான பெண்ணை கொடுமைபடுத்துவது ஆகாது.

இதேபோல வெறுமனே துன்புறுத்தப்பட்டதாக மட்டும் புகாரில் கூறியுள்ளார். எப்படி துன்புறுத்தப்பட்டார் என்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை. பெண்ணின் மற்ற குற்றச்சாட்டுகள் குடும்ப வன்முறை சட்டப்பிரிவில் வராது" என கூறி பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com