4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் பேரணியாக சென்றனர்.
4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
Published on

ஊட்டி,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் ஊட்டியில் நேற்று பேரணி நடைபெற்றது. இதற்கு ஆஸ்ரா (ஜியோ) தலைமை தாங்கினார். தினகரன் (ஜாக்டோ), ஆனந்தன் (ஜியோ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணியை அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில பொருளாளர் பாக்கியம் தொடங்கி வைத்தார். பேரணி ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி ஏ.டி.சி. திடலை அடைந்தது. பேரணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரளாக கலந்துகொண்டனர். முடிவில் அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் ஞானத்தம்பி பேசினார். முன்னதாக கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இது குறித்து ஆஸ்ரா (ஜியோ) கூறியதாவது:-

இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டு இருக்கும் அநீதி, ஆசிரியர்கள், அமைச்சு பணியாளர் கள், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளில் பணிபுரியும் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், தோட்டக்கலை துறை பண்ணை பணியாளர்கள் மற்றும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்டு உள்ளதை உடனே வழங்க வேண்டும். எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மே மாதம் 8-ந் தேதி சென்னை கோட்டை யை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com