முன்னாள் ராணுவ வீரராக ஜெய் ஆகாஷ்...!

முன்னாள் ராணுவ வீரராக ஜெய் ஆகாஷ்...!
Published on

`எக்ஸ் ஆர்மி' என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. இதில் ஜெய் ஆகாஷ் கதாநாயகனாகவும், அஷ்மிதா, அக்ஷாயா ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். இமான் அண்ணாச்சி, கராத்தே ராஜா, தினேஷ் மேட்னே, மீசை ராஜேந்திரன், மைக்கேல் அகஸ்டின், ராஜ்மித்ரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தை சாய்பிரபா டைரக்டு செய்கிறார். படம் பற்றி அவர் கூறும்போது, ``ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ராணுவ வீரர் ஜெய் ஆகாஷ், நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்களை கண்டு ஆவேசம் அடைகிறார்.

ஏற்கனவே ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் போரில் காயம் அடைந்து ஊனமுற்று தேச பக்தியுடன் இருக்கும் முன்னாள் ராணுவ வீரர்களை ஒரு படைபோல் திரட்டி, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை தேடிப் பிடித்து ஜெய் ஆகாஷ் எப்படி பழிவாங்குகிறார்? என்பதை ஆக்ஷன் அதிரடியுடன் இப்படம் சொல்கிறது'' என்றார்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் தயாராகிறது. ஜெய் ஆகாஷ் திரைக்கதை எழுதி உள்ளார். ஒளிப்பதிவு: ஏ.சி.மணிகண்டன், இசை: எஸ்.சதீஷ்குமார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com