

விருதுநகர்,
ரேஷன் அரிசி கடத்தியவருக்கு ஒரு வருட ஜெயில் தண்டனை விதித்து விருதுநகர் கோர்ட்டு உத்தரவிட்டது.
வாகன சோதனை
விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் கடந்த 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சென்ற மினி லாரி ஒன்றை சோதனையிட்டனர். அதில் 1,950 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து லாரியில் இருந்த தளவாய்புரத்தை சேர்ந்த ராமர் என்பவரை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.
ஒரு வருட ஜெயில்
இந்த வழக்கை விசாரித்த விருதுநகர் முதல் மாஜிஸ்திரேட்டு மருதுபாண்டி குற்றம் சாட்டப்பட்ட ராமருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ. 2,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.