கமுதி வட்டத்தில் ஜமாபந்தி

கமுதி வட்டத்தில் ஜமாபந்தி நடைபெற உள்ளது.
கமுதி வட்டத்தில் ஜமாபந்தி
Published on

கமுதி,

கமுதி தாசில்தார் மாதவன் கூறியதாவது:- கமுதி வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி இன்று (திங்கட்கிழமை) பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற உள்ளது. 21-ந்தேதி அபிராமம் உள் வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங் களுக்கும், 22-ந்தேதி கமுதி கிழக்கு உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்கும், 23-ந் தேதி கமுதி மேற்கு உள்வட்டத்தில் கிராமங்களுக்கும், 24-ந் தேதி கோவிலாங்குளம் உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களும் மற்றும் 25-ந் தேதி பெருநாழியில் உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களும் வருவாய் தீர்வாயம் கணக்கு முடிக்கும் பணிகள் நடைபெற உள்ளன. பொதுமக்கள் ஜமாபந்தி தொடர்பான மனுக்களை வருகிற 31.7.2021 வரை இ-சேவை மையங்கள் மூலமாக அளிக்கலாம். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com