பா.ஜனதாவை தோற்கடிக்க ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்;காங்கிரசுக்கு குமாரசாமி வேண்டுகோள்

பா.ஜனதாவை தோற்கடிக்க ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என காங்கிரசுக்கு குமாரசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பா.ஜனதாவை தோற்கடிக்க ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்;காங்கிரசுக்கு குமாரசாமி வேண்டுகோள்
Published on

பெங்களூரு:

மாநிலங்களவை தேர்தலையொட்டி முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

மாநிலங்களவை தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) சார்பில் வேட்பாளராக குபேந்திர ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார். அவர் தொழிலதிபர், சமூக சேவகர், முற்போக்கு சிந்தனையாளர். அவர் ஒரு அனுபவம் வாய்ந்த மாநிலங்களவை உறுப்பினர். அதனால் அவருக்கு அனைத்து கட்சிகளும் திறந்த மனதுடன் ஆதரவு அளிக்க வேண்டும். மதசார்பற்ற சக்திகளை பலப்படுத்தும் நோக்கத்தில் காங்கிரஸ் கட்சி தனது முழு ஆதரவை வழங்க வேண்டும்.

பா.ஜனதாவை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி தனது உபரி ஓட்டுகளை ஜனதா தளம் (எஸ்) வேட்பாளருக்கு அளிக்க வேண்டும். இந்த தேர்தல் முடிவின் அடிப்படையில் வரும் காலத்தில் மக்கள் முடிவு செய்வார்கள். இதில் சந்தேகம் இல்லை. இதை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா புரிந்து கொள்வார் என்று உறுதியாக நம்புகிறேன்.

இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com