ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை மறுநாள் ஜேஷ்டாபிஷேகம்

ஜேஷ்டாபிஷேகம் நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் மூலவர் தரிசனம் கிடையாது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை மறுநாள் ஜேஷ்டாபிஷேகம்
Published on

ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மூலவர் பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனால் அன்று முழுவதும் மூலஸ்தானத்தில் பெருமாளை தரிசனம் செய்ய இயலாது. மறுநாள் 9-ந் தேதி (புதன்கிழமை) திருப்பாவாடை சேவையை முன்னிட்டு மாலை 3 மணிக்கு மேல் மூலஸ்தானத்தில் பெருமாளை தரிசனம் செய்யலாம்.

மேலும் மூலவர் பெருமாளுக்கு தைலக்காப்பு சாற்றப்பட்டுள்ளதால் அது உலரும் வரை மூலவர் பெருமாளின் திருமுகத்தை மட்டுமே தரிசிக்க இயலும் என்று கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்துள்ளார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com