பெண்ணிடம் நகை பறிப்பு

கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
பெண்ணிடம் நகை பறிப்பு
Published on

மதுரை,

மதுரை எஸ்.எஸ்.காலனி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்பாபு. இவரது மனைவி கயல்விழி (வயது 46). சம்பவத்தன்று இவர் கணவருடன் மோட்டார்சைக்கிளில் பரவையில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்தனர். விளாங்குடி மீனாட்சி மில் அருகே சென்ற போது அவர்கள் திடீரென்று கயல்விழி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com