

தேன்கனிக்கோட்டை:
தளி அருகே உள்ள மதகொண்டப்பள்ளி பாரதியார் நகரை சேர்ந்தவர் லட்சுமையா. இவரது மனைவி சரோஜம்மாள் (வயது 62). இவர்கள் மளிகைக்கடை நடத்தி வருகின்றனர். சம்பவத்தன்று காலை சரோஜம்மாள் கடையின் முன்பு நின்று இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர்கள் 2 பேர் சிகரெட் கேட்பது போல் நடித்து சரோஜம்மாள் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து சரோஜம்மாள் தளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.