பாப்பாரப்பட்டி அருகே பட்டப்பகலில் துணிகரம்: தனியார் பள்ளி ஆசிரியை வீட்டில் 11 பவுன் நகை திருட்டு

பாப்பாரப்பட்டி அருகே பட்டப்பகலில் தனியார் பள்ளி ஆசிரியை வீட்டில் 11 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாப்பாரப்பட்டி அருகே பட்டப்பகலில் துணிகரம்: தனியார் பள்ளி ஆசிரியை வீட்டில் 11 பவுன் நகை திருட்டு
Published on

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே பட்டப்பகலில் தனியார் பள்ளி ஆசிரியை வீட்டில் 11 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் பள்ளி ஆசிரியை

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் பாலக்கோடு அருகே உள்ள தனியார் பால் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 32). தனியார் பள்ளி ஆசிரியை. நேற்று முன்தினம் ஆசிரியை விஜயலட்சுமி காலையில் பள்ளிக்கு சென்று விட்டார். சரவணன் மதியம் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார்.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் டியூஷன் படிப்பதற்காக மாலை ஆசிரியை வீட்டுக்கு வந்தனர். அப்போது வீடு திறந்து இருந்தது. இதனால் ஆசிரியை பள்ளி முடிந்து வந்து விட்டார் என கருதி சிறுவர்கள் வீட்டுக்குள் சென்றனர். ஆனால் ஆசிரியை விஜயலட்சுமி இல்லை. மேலும் வீட்டில் இருந்த பீரோ திறந்தும், அதில் இருந்த துணிமணிகள் சிதறியும் கிடந்தன.

போலீசார் விசாரணை

இதுகுறித்து சிறுவர்கள் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்து விட்டு ஆசிரியைக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 11 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் பாப்பாரப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுத்தேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

வீடு பூட்டி இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த திருட்டு சம்பவம் தொடாபாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com