13 மையங்களில் இளநிலை எழுத்தர் தேர்வு நடந்தது

காரைக்கால் மாவட்டத்தில் 13 மையங்களில் நடந்த இளநிலை எழுத்தர் தேர்வை 3942 பேர் எழுதினர்.
13 மையங்களில் இளநிலை எழுத்தர் தேர்வு நடந்தது
Published on

காரைக்கால்

காரைக்கால் மாவட்டத்தில் 13 மையங்களில் நடந்த இளநிலை எழுத்தர் தேர்வை 3942 பேர் எழுதினர்.

இளநிலை எழுத்தர் தேர்வு

புதுவை அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 165 இளநிலை எழுத்தர் (எல்.டி.சி.), 55 பண்டக காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு இன்று நடந்தது. காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தேர்வு நடைபெற்றது.

மாவட்ட அளவில் மொத்தம் 5,537 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1,932 ஆண்கள், 2,010 பெண்கள் என மொத்தம் 3,942 பேர் தேர்வு எழுதினர். 1,595 பேர் தேர்வு எழுதவில்லை.

கலெக்டர் ஆய்வு

செருமாவிலங்கை பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரி, கோட்டுச்சேரி வ.உ.சி. மேல்நிலைப்பள்ளி, அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட தேர்வு மையங்களில் கலெக்டர் குலோத்துங்கன் நேரில் ஆய்வு செய்தார். மேலும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளிகளையும் (கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்) கலெக்டர் பார்வையிட்டார். புதுவையில் இருந்து உள்ளாட்சி துறை இயக்குனர் சக்திவேல் மேற்பார்வையாளராக வந்து, தேர்வு மையங்களை ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் உத்தரவின்பேரில், போலீஸ் சூப்பிரண்டுகள் சுப்பிரமணியன், கவாஸ் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com