

காளி படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து இருக்கிறார். கதாநாயகிகளாக அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா ஆகிய 4 பேரும் நடித்துள்ளனர். ``காளி படத்தை ஆரம்பித்தபோது, இந்த `டைட்டில் வேண்டாம். `காளி என்று பெயர் சூட்டினால், ஏதாவது விபரீதம் நிகழும் என்று நிறைய பேர் பயமுறுத்தினார்களாம்.
``பயமுறுத்தியபடி, எதுவும் நிகழவில்லை. அது, ஒரு மூட நம்பிக்கை என்று நிரூபிக்கப்பட்டு விட்டது. நான், என் சொந்த காலில் நிற்க விரும்புகிறேன். அதற்காகவே படங்களை இயக்கி வருகிறேன் என்று கூறுகிறார், கிருத்திகா உதயநிதி!