கபடி போட்டி

மாநிலஅளவிலான ஆண்கள் கபடி போட்டியில் 2-வது இடம் பெற்ற ராமநாதபுரம் மாவட்ட வீரர்களை கலெக்டர் சங்கர்லால் குமாவத் பாராட்டினார்.
கபடி போட்டி
Published on

ராமநாதபுரம்,

மாநிலஅளவிலான ஆண்கள் கபடி போட்டியில் 2-வது இடம் பெற்ற ராமநாதபுரம் மாவட்ட வீரர்களை கலெக்டர் சங்கர்லால் குமாவத் பாராட்டினார்.

மாநில அளவிலான போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் கடற்கரையில் 2 நாட்கள் மாநில அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தின் சார்பில் ஆண்கள் கபடி அணி கலந்து கொண்டு விளையாடியது.

இதில், ராமநாதபுரம் மாவட்ட அணி முதல் கால் இறுதி போட்டியில் திருவாரூர் மாவட்ட அணியை 28-க்கு 13 என்ற புள்ளி கணக்கில் வென்றது. இதனை தொடர்ந்து அரைஇறுதி போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணியை 25-க்கு 12 என்ற புள்ளி கணக்கில் வென்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இறுதி போட்டியில் நாகப்பட்டினம் அணியுடன் விளையாடி 22-க்கு 25 என்ற புள்ளி கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்து மாநில அளவில் 2-ம் இடம் பெற்றுள்ளது.

2-வது இடம்

இறுதிபோட்டிக்குள் நுழைந்து மாநில அளவில் 2-ம் இடம் பெற்றுள்ள ராமநாதபுரம் மாவட்ட ஆண்கள் கபடி அணி வீரர்களை நேற்று ராமநாதபுரம் கலெக்டர் சங்கர்லால் குமாவத் நேரில் அழைத்து பாராட்டினார். நிகழ்ச்சியில், பயிற்சியாளர் ஆரோக்கியதாஸ், மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com