காதலை தேடி நித்யா நந்தா

‘திரிஷா இல்லேன்னா நயன்தாரா,’ ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், ஆதிக் ரவிச்சந்திரன். இவர் அடுத்து, கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்யும் படத்துக்கு, ‘காதலை தேடி நித்யா நந்தா’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
காதலை தேடி நித்யா நந்தா
Published on

ஜீ.வி.பிரகாஷ்-அமைரா தஸ்தூருடன் காதலை தேடி நித்யா நந்தா
திரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் இணைந்து பணிபுரிந்த ஜீ.வி.பிரகாஷ் குமார்-ஆதிக் ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் மீண்டும் இந்த புதிய படத்தில் இணைந்து பணிபுரிகிறார்கள். படத்தை பற்றி டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியதாவது:-

இந்த காலகட்டத்தில், உண்மையான காதல் இருக்கிறதா, இல்லையா? என்ற கேள்வி எல்லோருடைய மனதிலும் இருந்து கொண்டிருக்கிறது. அதற்கு பதில் கூறுவது போல் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. உண்மையான காதல் எல்லாவற்றையும் தோற்கடித்து விடும்.

அந்த காதலுக்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது? என்பதை கதை உணர்த்தும். அதற்கு உதாரணமாக படத்தின் கதாநாயகன் ஜீ.வி.பிரகாஷ்-கதாநாயகி அமைரா தஸ்தூர் ஆகிய இருவரும் இருப்பார்கள். அநேகன் படத்தை அடுத்து அமைரா தஸ்தூர் நடிக்கும் படம், இது. கதாநாயகனாக நடிப்பதுடன் படத்துக்கு இசையும் அமைக்கிறார், ஜீ.வி.பிரகாஷ்.

யோகி பாபு, வி.டி.வி.கணேஷ், ஆனந்தராஜ் ஆகிய மூவரும் அண்ணன்-தம்பியாக நடிக்கிறார்கள். நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. மூத்த அண்ணனாக ஆனந்தராஜ், அடுத்த சகோதரராக பாட்டு வாத்தியார் வேடத்தில் வி.டி.வி.கணேஷ், கடைசி சகோதரராக ராணுவ வீரர் வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார்கள்.

அரண்மனை படத்தை தயாரித்த தினேஷ் கார்த்திக், இந்த படத்தை தயாரிக்கிறார். படப்பிடிப்பு ஊட்டி, காரைக்குடி ஆகிய இடங்களில் நடைபெற்றது. 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com