தர்மபுரி அருகே காளியம்மன் கோவில் தேரோட்டம்

காளியம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
தர்மபுரி அருகே காளியம்மன் கோவில் தேரோட்டம்
Published on

தர்மபுரி:

தர்மபுரி அருகே பெரியகுரும்பட்டி மற்றும் மாதுப்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ காளியம்மன் கோவில் சித்ரா பவுர்ணமி தேர்த் திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து கூழ் ஊற்றும் நிகழ்வும், மாவிளக்கு ஊர்வலமும் நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். இதைத்தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம், விநாயகர் தேரோட்டம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காளியம்மன் தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். பின்னர் சிறப்பு பூஜையுடன் தேரோட்டம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com