

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டு விரைவில் வீடு திரும்புவார் என தகவல் வெளியானது.
இந்நிலையில் அவர் இன்று காலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். விரைவில் அவர் மீண்டும் படப்பிடிப்பிற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் நடிகர் கமலுக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு அந்த பாதிப்பில் இருந்து அவர் குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.