

திருச்செந்தூர், மே:
தமிழகத்தில் கொரோனா 2-ம் கட்ட அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் சித்த மருத்துவ பிரிவு தொடங்கி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர் விஷ்ணுசந்திரன் உத்தரவுப்படி கோவில் சித்த மருத்துவ பிரிவு சார்பில் சிவன் கோவில் முன்பு தினமும் காலை மற்றும் மாலையில் சுமார் 1000 பேர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில், கோவில் உதவி ஆணையர் செல்வராஜ், சித்தா டாக்டர் ரவி, கண்காணிப்பாளர் ஆனந்த், சிவன் கோவில் மணியம் நெல்லையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.