கர்நாடக முதல்-மந்திரி உருவபொம்மை எரிப்பு

புதுவையில் கர்நாடக முதல்-மந்திரி உருவபொம்மையை இந்திய ஜனநாயக கட்சியினர் எரித்து போராட்டம் நடத்தினர்
கர்நாடக முதல்-மந்திரி உருவபொம்மை எரிப்பு
Published on

புதுச்சேரி

தமிழகம்-புதுச்சேரிக்கு காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் இந்திராகாந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். அப்போது சித்தராமையாவின் உருவப்படத்தை கிழித்து எறிந்தனர். மேலும் அவரது உருவப்பொம்மையை தீயிட்டு கொளுத்தினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தீயை தண்ணீரை ஊற்றி அணைத்து அவர்களிடமிருந்து உருவப்பொம்மையை பறித்து சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இந்த போராட்டம் காரணமாக இந்திரகாந்தி சிலை அருகே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

-

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com