உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் காங்கிரசின் ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வி முகம்


உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் காங்கிரசின் ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வி முகம்
x

உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் காங்கிரசின் ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வியடைந்தார்.

பெங்களூரு

கர்நாடகத்தின் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார். மாநிலத்தில் பா.ஜனதா மூத்த தலைவராக இருந்த இவர் 5 முறை எம்.எல்.ஏ.வாக ஆகியுள்ளார். மேலும் தொடர்ந்து 3 முறை உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் பா.ஜனதா சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் வருகிற சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா சார்பில் உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் ஜெகதீஷ் ஷெட்டர் டிக்கெட் கேட்டு வந்தார். ஆனால், அவருக்கு பா.ஜனதா மேலிடம் டிக்கெட் வழங்க மறுத்துவிட்டது. அவருக்கு பதில் உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் மகேஷ் தெங்கினகாய் என்பவருக்கு பா.ஜனதா டிக்கெட் வழங்கியது. இதனால் அவர் அதிருப்தி அடைந்தார்.

மேலும், அவரை சமாதானப்படுத்த கர்நாடக பா.ஜனதா மற்றும் மேலிட தலைவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால், சமாதானம் அடையாத ஜெகதீஷ் ஷெட்டர், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், பா.ஜனதாவில் இருந்து விலகிய அவர், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்கிரசில் தன்னை இணைத்து கொண்டார்.

இது கர்நாடக பா.ஜனதாவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வடகர்நாடகத்தில் செல்வாக்கு மிகுந்த தலைவராக பார்க்கப்படும் ஜெகதீஷ் ஷெட்டர் கட்சியில் இருந்து விலகியது, அங்கு அக்கட்சிக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியது.

ஏனெனில் கர்நாடகத்தில் உள்ள பெரும்பான்மை சமூகமான லிங்காயத்தின் பலம் வாய்ந்த தலைவராக உள்ள ஜெகதீஷ் ஷெட்டர், வடகர்நாடகத்தில் 10-12 தொகுதிகளில் செல்வாக்கு மிகுந்தவராக இருந்தார்.

தார்வாட் மத்திய தொகுதியில், முன்னாள் முதல் மந்திரியும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜெகதீஷ் ஷெட்டர் பின்தங்கியுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் மகேஷ் தெங்கினகாய் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.


Next Story