கர்நாடக அமைச்சரவை பட்டியல் வெளியீடு: 24 பேர் நாளை மந்திரிகளாக பதவியேற்பு


கர்நாடக அமைச்சரவை பட்டியல் வெளியீடு: 24 பேர் நாளை மந்திரிகளாக பதவியேற்பு
x

கர்நாடாகாவில் நாளை 24 பேர் மந்திரிகளாக பதவியேற்க உள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. கர்நாடக முதல் மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமாரும் கடந்த 20ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். அப்போது 8 பேர் மந்திரிகளாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சியின் 24 பேர் நாளை மந்திரிகளாக பதவியேற்க உள்ளனர். தினேஷ் குண்டுராவ், மகாதேவப்பா, ஹெச்.கே.பாட்டீல் உள்பட 24 பேர் மந்திரிகளாக பதவியேற்க உள்ளனர்.


Next Story