கர்நாடகா தேர்தல்: பா.ஜ.க.வை சேர்ந்த 8 மந்திரிகள் தோல்வி முகம்...!


கர்நாடகா தேர்தல்: பா.ஜ.க.வை சேர்ந்த 8 மந்திரிகள் தோல்வி முகம்...!
x

கர்நாடாகவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 219 தொகுதிகளுக்கான முன்னிலைகள் வெளியாகி உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி 114 இடங்கிளிலும், பாஜக 75 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 30 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

பெங்களூரு:

பழைய மைசூர் பிராந்தியத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய அளவில் முன்னிலையில் இருக்கிறது. பொதுவாக குமாரசாமியின் மத சார்பற்ற ஜனதா தளம் கட்சி அதிக இடங்களில் முன்னிலைக்கு வரும்.

இந்த முறை காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

மைசூர், மாண்டியா, சாம்ராஜ்நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள தொகுதிகள் பழைய மைசூர் பிராந்தியமாக கருதப்படுகிறது. இங்கு குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிதான் பொதுவாக அதிக இடங்களில் முன்னிலையில் இருக்கும்.

இந்த முறை காங்கிரஸ் பெரிய அளவில் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி 34 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 13 இடங்களிலும், பா.ஜ.க. 8 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. தபால் வாக்குகள் சுற்று முடிந்து, வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால் முடிவுகள் இன்னும் மாற வாய்ப்பு உள்ளது.

தற்போதைய நிலவரப்படி, கர்நாடாகவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 219 தொகுதிகளுக்கான முன்னிலைகள் வெளியாகி உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி 114 இடங்கிளிலும், பாஜக 75 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 30 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

பெங்களூர் யஷ்வந்தபுரத்தில் போட்டியிட் மந்திரி எஸ்டி சோமசேகர், துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளியில் போட்டியிட்ட மந்திரி மாதுசாமி, சிக்பள்ளாப்பூரில் களமிறங்கிய மந்த்திரி சுதாகர், பெங்களூர் புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டையில் போட்டியிட்ட எம்டிபி நாகராஜ், பாகல்கோட்டை மாவட்டம் முதோல் தொகுதியில் போட்டியிட்ட கோவிந்த கார்ஜோள், மண்டியா மாவட்டம் கேஆர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட மந்திரி நாராயணகவுடா, பல்லாரி புறநகர் தொகுதியில் போட்டியிடும் ஸ்ரீராமுலு உள்ளிட்டவர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

திரிதா ஹல்லி தொகுதியில் போட்டியிடும் மந்திரி ஞானேந்திரா தோல்வி முகத்தில் உள்ளார். இதனிடையே சித்தராமையாவை எதிர்த்து போட்டியிடும் பாஜக சோமண்ணா 2 தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளார். சிக்மகளூர் தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் சிடி ரவி பின்னடைவை சந்தித்துள்ளார்.


Next Story