கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா பதவியேற்பு விழா: ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் பங்கேற்பு


தினத்தந்தி 20 May 2023 6:57 AM GMT (Updated: 20 May 2023 7:05 AM GMT)

கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா பதவியேற்க உள்ள நிலையில் நிகழ்ச்சியில் ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடக தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்கிறது. முதல்-மந்திரியாக சித்தராமையா இன்று பதவியேற்க உள்ளார். துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமாரும் பதவியேற்க உள்ளார். மேலும், 8 மந்திரிகள் பதவியேற்க உள்ளனர்.

இந்நிலையில், கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா பதவியேற்க உள்ள நிலையில் பதவியேற்பு விழா பல்வேறு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, அசோக் கெலாட், திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரிகள் மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா, பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் உள்பட பல்வேறு தலைவர்கள் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.


Next Story