மீண்டும் தள்ளிப்போன கார்த்தி படத்தின் ரிலீஸ் தேதி

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் விருமன். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார்.
மீண்டும் தள்ளிப்போன கார்த்தி படத்தின் ரிலீஸ் தேதி
Published on

கொம்பன் படத்தினை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி 'விருமன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும், அதிதி சங்கரின் அறிமுக படம் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com