போலீஸ் அதிகாரியாக கதிர்; துப்பறிவாளராக நரேன்

தமிழ் சினிமாவில் பாராட்டுகளை குவித்ததுடன் வெற்றிகரமாகவும் ஓடிய படம், ‘பரியேறும் பெருமாள்.’
போலீஸ் அதிகாரியாக கதிர்; துப்பறிவாளராக நரேன்
Published on

அந்த படத்தில் கதாநாயகனாக நடித்த கதிர், ஒரு புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கைதி படத்தில் அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்த நரேன், இந்த படத்தில் துப்பறிவாளராக வருகிறார். நட்டி, மிகப்பெரிய தாதாவாக நடிக்கிறார். கதிர் ஜோடியாக பவித்ர லட்சுமி நடிக்கிறார்.

இது ஒரு திகில் படம். படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. புது டைரக்டர் ஸாக் ஹாரிஸ் இயக்குகிறார். லவன் பிரகாசன், குகன் பிரகாசன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். சென்னை நகரில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com