கேதர்நாத் கோவில் நடை நாளை திறப்பு - ஏற்பாடுகள் தீவிரம்

கேதர்நாத் கோவிலில் மலர் அலங்காரங்கள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன.
Image Courtesy : ANI
Image Courtesy : ANI
Published on

டேராடூன்,

இந்துக்களின் நான்கு புனித தளங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தளங்களுக்குச் செல்லும் யாத்திரையானது 'சார் தாம்' யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. 

ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோவில்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசிக்க முடியும். குளிர்காலங்களில் குகைக்கோவில்கள் மூடப்பட்டு விடும். மேலும் பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் பாத யாத்திரை செல்ல தடை விதிக்கப்படும்.

அதன்படி இந்த ஆண்டு அக்ஷயதிரிதியை தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 30-ந்தேதி(நேற்று) 'சார் தாம்' யாத்திரை தொடங்கியது. நேற்று கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில்களின் நடைகள் திறக்கப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து மே 2-ந்தேதி(நாளை) அதிகாலை 7 மணிக்கு கேதர்நாத் கோவில் நடை திறக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கேதர்நாத் கோவிலில் மலர் அலங்காரங்கள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் யாத்திரைக்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து வரும் 4-ந்தேதி பத்ரிநாத் கோவில் நடை திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com