கேரளாவுக்கு லாரியில் கடத்திய 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

களியக்காவிளை அருகே கேரளாவுக்கு கடத்திய 10 டன் ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அதிகாரி பறிமுதல் செய்தார்.
கேரளாவுக்கு லாரியில் கடத்திய 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
Published on

களியக்காவிளை:

களியக்காவிளை அருகே கேரளாவுக்கு கடத்திய 10 டன் ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அதிகாரி பறிமுதல் செய்தார்.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

கடத்தல்

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. அதை தடுக்க வருவாய்த்துறை மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், களியக்காவிளை அருகே குழித்துறை பகுதியில் விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி புரந்தரதாஸ் தலைமையில், வருவாய் ஆய்வாளர் மைக்கேல் சுந்தர்ராஜ் கொண்ட குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்துமாறு அதிகாரி புரந்தரதாஸ் சைகை காட்டினார். ஆனால் டிரைவர் நிறுத்தாமல் லாரியை வேகமாக ஓட்டி சென்றார்.

10 டன் ரேஷன் அரிசி

சந்தேகமடைந்த அதிகாரிகள் லாரியை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியில் மடக்கி பிடித்தனர். உடனே லாரியில் இருந்து டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார். அதைதொடர்ந்து லாரிய சோதனை செய்தபோது சுமார் 10 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.

அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்த ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி சென்றதும் உறுதியானது. அதை தொடர்ந்து லாரியில் இருந்த அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து காப்புக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும், லாரியை தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தார்.

மேலும் தப்பியோடிய லாரி டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com