சாலையோர பெயர் பலகையில் மோதி வாலிபர் பலி

சாலையோர பெயர் பலகையில் மோதி வாலிபர் பலியானார்.
சாலையோர பெயர் பலகையில் மோதி வாலிபர் பலி
Published on

துவரங்குறிச்சி, மே.17-
சாலையோர பெயர் பலகையில் மோதி வாலிபர் பலியானார்.
பெயர் பலகையில் மோதினார்
துவரங்குறிச்சியை அடுத்த கரடிபட்டியை சேர்ந்தவர் அழகர் (வயது 30). இவர் துவரங்குறிச்சியில் இருந்து கரடிப்பட்டியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து கரடிப்பட்டி ஊர் பெயர் பலகையில் மோதினார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com