சைக்கிள் மீது அரசு பஸ் மோதி தொழிலாளி பலி

சைக்கிள் மீது அரசு பஸ் மோதி தொழிலாளி பலியானார்.
கரூர்
கரூர்
Published on

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை காவல்கார தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 40). கூலி தொழிலாளி. இவர் குளித்தலை அருகே உள்ள மணத்தட்டை ரேஷன் கடை அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் வந்த அரசு பஸ் அண்ணாதுரை சைக்கிள் மீது மோதியது. இதில் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அண்ணாதுரை படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அண்ணாதுரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய உப்பிடமங்கலம் அருகே உள்ள லட்சுமணம்பட்டி பகுதியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ஜெயபால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com